பொண்ணு ரெடி, இந்த வருஷம் சிம்புவிற்கு கல்யாணமா? அப்பா வெளியிட்ட தகவல் உண்மையா!

movie str vaalu
By Jon Jan 26, 2021 12:04 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து அடுத்தடுத்து வரும் வயதுகளில் படங்களில் நடித்து பிரபலமானாவர் நடிகை சிம்பு. டி ராஜேந்திரன் வாரிசு நடிகராக குழந்தையாக இருக்கும் போது நடித்து அறிமுகமாகினார். இதையடுத்து ரசிகர்கள் எஸ்டிஆர் என்ற கவுரத்தை பெற்று பிரபலமானார்.

இவர் சிக்காத கிசுகிசுக்களும் இல்லை சர்ச்சையான பேச்சுகளும் இல்லாமல் இல்லை என்று கூறுவார்கள். அந்தவகையில் பல சர்ச்சையில் சிக்கி வந்த தற்போது படங்களில் நடிக்க உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில்கூட சிம்பு தனது பழைய காதலிகளான திரிஷா மற்றும் ஹன்சிகா ஆகிய இருவருடன் மீண்டும் தன்னுடைய நட்பை தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால் அதனை சிம்பு குடும்பத்தினர் மறுத்தனர். பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே அறிவித்தனர். தற்போது மீண்டும் டி ராஜேந்தர் கொடுத்த பேட்டியில், ஈஸ்வரன் அருளால் 2021 ஆம் ஆண்டு சிம்புவுக்கு திருமணம் கண்டிப்பாக நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிம்புவின் நெருங்கிய சொந்தத்தில் இருந்து பெண் பார்த்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. போன வருடம் இதே தான் சொன்னீங்க என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.