சிம்புவுக்கு அதுக்கு மட்டும் மெசேஜ்! ரஜினி மகளை கேள்வி கேட்கும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அவரது தந்தை டி ராஜேந்திரனால் கூப்பிட்டு வந்தவர் நடிகர் சிலம்பரசன். சிம்பு என்று தற்போது அழைக்கும் அவர் மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். பல சர்ச்சைகள் பிரச்சனைகளை சந்தித்த பிறகு தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்து வருகிறார்.
சமீபத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரம் செய்தது. இதற்கு பல பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர். சிம்புக்கு சூப்பர் ஸ்டாரின் இரண்டாம் மகள் செளந்தர்யா ரஜினிகாந்தும் வாழ்த்து தெரிவித்தார். இதை பலர் கண்டபடி விமர்சித்து கிசுகிசு செய்திகளை பரப்பினார்கள்.
இன்று சிம்பு அவருடைய 39வது பிறந்தநாளை ஆரம்பித்துள்ளார். அதற்கு பல வாழ்த்து கூறி வருகிறார்கள். அதற்கு வாழ்த்து கூறிவிட்டு பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறவில்லையா செளந்தர்யா என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.