சிம்புவின் கார் மோதி முதியவர் பலி! வண்டி ஓட்டுனது சிம்பு வா? வைரலாகும் சிசிடிவி காட்சி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சிம்பு தற்போதுதான் பல பிரச்சனைகளை தாண்டி படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். இது ஆரம்பித்து சில மாதங்களில் கடந்த 18 மார்ச் வெள்ளிக்கிழமை அன்று இயக்குனரும் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர் குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே கார் சென்ற போது சாலையை கடக்க தவழ்ந்து சென்ற முனுசாமி என்ற முதியவர் மீது கார் மோதியுள்ளது. காரில் இருந்து டி ராஜேந்தர் உடனே ஆம்புலன்ஸிற்கு கால்செய்து ராஜுவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
காரை ஓட்டி வந்த சிம்புவின் ஓட்டுநனரை காவல் துறையினர் கைது செய்து வழக்கு பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முதியவர் முனுசாமி உயிரிழந்துள்ளார். இதற்கு சிம்பு மற்றும் டி ராஜேந்திரனுக்கு பொறுப்பில்லை என்று கார் ஓட்டுனர் பாண்டிபஜார் போலிசார் விவாரணை முடிவில் கூறியுள்ளனர்.
விபத்து நடந்து 5 நாட்களாகி இந்த செய்தி முதியவர் மரணமடைந்ததும் இந்த செய்தி தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
நடிகர் சிலம்பரசனின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்திரன் கார் மோதி தனியார் காவலாளி பலி. டி.ஆரின் ஓட்டுநர் செல்வம் கைது.@polimernews @ChennaiTraffic #TRajendhra #Simbu #CarAccident #cctv pic.twitter.com/WZ8AWzEpNp
— Saravanakumar (@Saravananjourno) March 23, 2022