எதுக்கு சவால் விடுறதுன்னு தெரியல? இதவிட்ட அறுபதாவது கல்யாணம் தான் சிம்பு..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டாராக டி ராஜேந்தர் அறிமுகப்படுத்தப்பட்டவர் சிம்பு. ஆரம்பத்தில் பல காதல் சர்ச்சையிலும் சிக்கி சின்னாபின்னமானவர்.
இவரை போன்றே சர்ச்சையில் சிக்கியவர் நடிகர் விஷால். நாற்பது வயதை கடந்தும் சிங்கிளாக சுற்றி கொண்டிருக்கும் அவருக்கு எப்போது திருமணமாகும் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அவரோ ஏற்கனவே போட்ட ஒரு பெரிய சபதத்தின் காரணமாக இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
என்னவென்றால் விஷால் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சங்க கட்டடம் எப்போது முடிகிறதோ அங்குதான் என்னுடைய திருமணமும் நடக்கும் என்று ஒரே போடாக போட்டார்.
ஆனால் தற்போது வரை அது நடிக்காத காரியமாக இருக்கிறது. ஏனென்றால் கட்டடம் கட்ட இன்னும் 3 ஆண்டுகளாகும் என்று சமீபத்தி நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி கூறியிருந்தார். விஷால் எப்படி சவால் விட்டு திருமணத்திற்கு ஆப்பு வைத்துக்கொண்டாரோ அதேபோல் சிம்புவும் தற்போது சவால் விட்டுள்ளாராம்.
சிம்பு ஒரு மிகப்பெரிய ஆசையில் இருக்கிறார். அதாவது விஜய் மற்றும் முன்னணி நடிகர்களை போல இவரும் ஈசிஆரில் ஒரு பிரமாண்டமான பங்களாவை கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
தன்னுடைய ஆசை நிறைவேறிய பின்பு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவிலும் அவர் இருக்கிறார். அப்படியிருக்கையில் பிரம்மாண்ட கட்டிடம் கட்ட சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகும் என்பதால் ரசிகர்கள் கடைசியில் 60வது கல்யாணம் தான் செய்வீங்களோ என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.