சிம்புவின் முன்னாள் காதலிக்கு திருமணம்.. அப்போ STR-க்கு எப்போ திருமணம் நடக்கும்?
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் மஹா எனும் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் நடிகையும் சிம்புவின் முன்னாள் காதலியுமான ஹன்சிகா கதையின் நாயகியாக நடித்திருந்தார்.
நடிகை ஹன்சிகாவும், நடிகர் சிம்புவும் சில ஆண்டுகள் காதலித்து வந்தார்கள். இவர்களுடைய காதல் திருமண பேச்சு வரை சென்று நின்றுபோனது. இதன்பின், நடிகர் சிம்பு நடிகை நிதி அகர்வாலுடன் ஒரே வீட்டில் லிவிங் டு கெதரில் இருப்பதாக தகவல் வெளிவந்தது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது நடிகை ஹன்சிகாவிற்கு திருமணம் நடக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரபல அரசியல்வாதியின் மகனை தான் நடிகை ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள போவதாக திரையுலகில் பேச்சு அடிபடுகிறது. ஆனால், மாப்பிள்ளையின் பெயர் இதுவரை வெளிவரவில்லை. விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற போவதாகவும் தகவல் கூறுகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.