தமிழா தமிழா: என் கணவருக்கு நானே சரக்கு ஊத்திக்கொடுக்கணும்!! நெட்டிசன்கள் புலம்பல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. சமீபத்திய எபிசோட்டில் ஜென் ஜி தலைமுறை பெண்கள், தங்களின் வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படையாக பேசி பலரது விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

நிகழ்ச்சியின் போது பேசிய ஒரு பெண், எனக்கு வரப்போகும் கணவர் மாதம் ரூ. 3 லட்சம் சம்பளம் வாங்க வேண்டும், பிசினஸ் தான் செய்ய வேண்டும், முழு தாடி இருக்க வேண்டும், கேடிஎம் பைக் வைத்திருக்க வேண்டும் என்று கூறியதோடு, அவருக்கு குடிப்பழக்கம் வேண்டாம் என்று பலர் சொல்வார்கள்ம் ஆனால் நானே அவருக்கு மது ஊற்றிக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அப்போது பேசிய தொகுப்பாளர் ஆவுடையப்பன், நீங்கள் ஏன் ஊற்றிக் கொடுக்க வேண்டும் என்றதற்கு, நான் அவருக்கு ஊட்டிவிட வேண்டும், இந்தப் பழக்கத்தால் நிறைய காதல்கள் பிரிந்து போயிருக்கிறது, நான் யாரையும் காதலிக்கவில்லை, எனக்கு இலக்கே அதுதான் சார், நமக்கு ஒருவர் வருகிறார் என்றால் அவருக்கு எல்லாமே நாமே செய்ய வேண்டும், ஊட்டிவுடுவது முதல் சமைப்பது வரை, சாப்பாடு போடுவதில் இருந்து மது ஊற்றிக் கொடுப்பது வரை எல்லாமே நானே பண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார் அப்பெண்.

அதற்கு ஆவுடையப்பன், ஊட்டிவிடுவது, ஓகேம்மா, ஊற்றிக் கொடுப்பது எப்படி சரியாகும் என்று கேட்க, குழந்தையை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். என் வருங்கால கணவருக்கு சரக்கு ஊற்றிக் கொடுக்க வேண்டும் என்பது என் கனவு சார், சின்ன வயசில் என் அம்மா, என் அப்பாவுக்கு குடிக்கக்கூடாது என்று கூறிக்கொண்டே இருப்பார், அதனால் என் அப்பா மிகவும் டார்ச்சராகிவிட்டார்.
அவருக்கு நிறைய நோய்கள் எல்லாம் வந்தது சார், என் கணவர் அதுபோல் ஆகக்கூடாது என்பதற்காக நானே அவருக்கு ஊற்றிக் கொடுக்க நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் அப்பெண். இதனை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
எனக்கு வர போற புருஷனுக்கு 3 லட்சம் சம்பளம் இருக்கணும். இருந்தா அவனுக்கு நானே சரக்கு ஊத்தி குடுப்பேன், அதான் என் கனவு - genz
— Nordnomad (@arcot2arctic) September 13, 2026
அடடா..என்ன மாதிரியான கனவு pic.twitter.com/IKEMa6GRsy