கோடிகளுக்கு ஆசைப்பட்டு ஆணவத்தில் உச்சிக்கே சென்ற சிம்பு! டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சி!
தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு பின் மாநாடு படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர் சிம்பு. அவர் நடித்த மாநாடு படம் 100 நாட்களை கடந்ததை சமீபத்தில் கொண்டாடினர். இதையடுத்து சிம்புவுக்கு அடுத்தடுத்த படங்கள் கிடைத்தது.
தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், ஏற்கனவே வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷ் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கினார். அதற்கு முன் சிம்புவிடம் மூன்று படங்களுக்கு 25 கோடி கொடுப்பதாக கூறி ஒப்பந்தம் செய்துள்ளார்.
வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் என மூன்று படங்கள் ஆரம்பிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சிம்பு. இந்நிலையில், மாநாடு படத்தினால் சிம்புவின் மார்க்கெட் உயர ஒரு படத்திற்கு 30 கோடி சம்பளமாக உயர்த்தியிருக்கிறார்.
வெளியில் ஒரு படத்திற்கு 60 கோடி ரூபாய் வியாபாரம் ஏறியுள்ளது. அதிலும் தெலுங்கு இயக்குனர்கள் 30 கோடி வரை சம்பளம் தருவதாகவும் பேசி வருகிறார்களாம்.
இதையெல்லாம் யோசித்த சிம்பு, இந்த 25 கோடிக்கு 3 படங்கள் பண்ண முடியாது என்றும் ஒரு படத்திற்கு 25 கோடி சம்பளம் கொடுங்கள் இல்லை என்றால் வெந்து தணிந்தது காடு படத்திற்கு பழைய சம்பளமாக கொடுங்கள் என்று ஐசரி கணேஷிடம் கூறியிருக்கிறார். ம
ற்ற இரு படங்களுக்கு படத்திற்கு 25 கோடி சம்பளமாக கொடுங்கள் இல்லை என்றால் கொரோனா குமாரை தற்போதைக்கு பண்ண வேண்டாமே என்று கேட்டுள்ளார் சிம்பு. இதனால் கடும் அதிர்ச்சியில் ஐசரி கணேஷ் என்ன செய்யலாம் என்று புலம்பி வருகிறாராம்.