தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வந்த சிம்பு! கண்ணீர்விட்டு அழும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் தந்தை டி ராஜேந்திரனால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் சிம்பு. வயது ஆக ஆக பல படங்களில் நடித்து வந்தார். வின்னைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின் போதிய படங்கள் வெற்றியை கொடுக்காததால் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.
இடையில் அதிக உடல் எடையை ஏற்றியதாலும் விமர்சிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டும் முற்றிலும் உடல் எடையை குறைக்க விடாத முயற்சியை செய்தார். பின் கட்டுக்கொண்டு வந்து ஈஸ்வரன் படத்தில் நடிக்க ஆரம்பித்து மாநாடு படத்தின் கோடி வசூல் வெற்றியை கொடுத்தார்.
அதன்மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு சமீபத்தில் கடுமையான உடற்பயிற்சியை செய்து 30 கிலோ எடையை குறைத்துள்ளார். அதற்காக பேஸ்கெட் பால், பேட்மிட்டன், கிரிக்கெட், கால்பந்து, என விளையாட்டிகள் விளையாடியும் ஜிம்மில் பல மணி நேரம் செலவழித்து வொர்க்கவுட் செய்தும் வந்துள்ளார்.
மேலும் பரதநாட்டியம், யோகா, களரி, மசாஜ் உள்ளிட்டவைகளையும் செய்துள்ளார். அவர் உடற்பயிற்சி செய்து கண்ணீர் விட்டு அழும் வீடியோ அவரே அவரது சமுகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.