என்னது காதலித்தவள் வருவாளா! வைரலாகி சர்ச்சையில் சிம்புவின் போஸ்ட்டர்..

simbu str nayanthara maanaadu vigneshshivan
By Edward Nov 18, 2021 04:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் தன் தந்தை படத்திலேயே இளம் நடிகராக அறிமுகமாகியவர் நடிகை சிம்பு. ஆரம்பத்தில் அனைவரும் ஷாக் கொடுத்து பார்க்கும் படங்களை வெளியிட்டு வந்து சில காரணங்களால் படவாய்ப்பினையும் இழந்தார்.

இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் இவர் மீது குறை கூறியநிலையிலும் சில காதல் சர்ச்சையிலும் சிக்கினார். நயன் தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் காதலித்து பின் தோல்வியையும் சந்தித்தார்.

தற்போது மீண்டும் தன் ஆட்டத்தினை ஆரம்பித்து வரும் சிம்புவின் மாநாடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நவம்பர் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. நடிகை நயன்தாரா பிறந்த நாளின் போது சிம்புவின் மாநாடு இசை வெளியாகியுள்ளது. ஏற்கனவே முதல் போஸ்டரில் சில விஷயங்களை வைத்து கிசுகிசுவாக பேசிவந்தனர்.

இதைவைத்து சிலர் சிம்பு இன்னும் அந்த நடிகையை காதலித்துக்கொண்டிருக்கிறார் என்று மீம்ஸ்கள் வெளியானது. இந்நிலையில் என்னைக்காதலித்தவள் திரும்பி வருவாள் என்ற சிம்புவின் போஸ்ட்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்னது காதலித்தவள் வருவாளா! வைரலாகி சர்ச்சையில் சிம்புவின் போஸ்ட்டர்.. | Simbu Lover Return Poster Viral Social Media