வேற இடமே கிடைக்கலயா?! நையன் சீட்டில் உட்கார்ந்தா தான் சிம்புக்கு ராசியாமே..புகைப்படம்..

simbu nayanthara tamilcinema maanaadu number9
By Edward Nov 18, 2021 09:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளில் சிக்கி சினிமாவே வேண்டாம் என்ற அளவிற்கு ஒதுங்கி இருந்தார் நடிகர் சிம்பு. தன்மீது வந்த அனைத்து எதிர்ப்புகளையும் கண்டுகொள்ளாமல் தன் வேலை பார்த்து வந்த சிம்பு மீண்டும் தன் இடத்தை பிடித்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அதில் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் சூப்பர் லுக்கில் நடித்து வந்தார். அப்படத்தில் இசை வெளியீட்டு விழா நவம்பர் 18 அன்று வெளியாகி வருகிறது. நிகழ்ச்சியின் போது நடிகர் சிம்பு 9 என்ற நம்பர் கொண்ட சீட்டில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம்பர் 9க்கும் சிம்புவுக்கு பல காரணங்களில் ராசியாம். தன் தந்தை சினிமாவில் ஆரம்பித்த படத்தில் இருந்து சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வரை 9 வது நம்பர் இருந்துள்ளது. இதை சிலர் நயன் தாராவின் பேவரெட் தான் என்று பேசியும் வந்தனர்.

ஆனால் உண்மையில் 9 நம்பர் என்பது அவருக்கு ஒரு செண்டிமெண்ட் நம்பர் தான் என்று உறுதியாக அவரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். நவம்பர் 18 நயன்தாரா பிறந்த நாள் என்பதாலும் இப்படியான வதந்திகள் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

வேற இடமே கிடைக்கலயா?! நையன் சீட்டில் உட்கார்ந்தா தான் சிம்புக்கு ராசியாமே..புகைப்படம்.. | Simbu Maanaadu Audio Launch Sitting Seat Issue 9

GalleryGallery