சிம்புவை கடைசியில் திட்டமிட்டு ஏமாற்றிய தொலைக்காட்சி.. காப்பாற்றி தூக்கி விட்ட அப்பா..

simbu venkatprabhu maanaadu sjsuriah
By Edward Nov 26, 2021 01:55 PM GMT
Report

நடிகர் சிம்பு நடித்து தற்போது தியேட்டரில் வெற்றியை பெற்று வரும் படம் மாநாடு. ஆரம்பத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கையில் சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார் சிம்பு. படம் வெளியாகவிடாமல் சிக்கலில் இருந்த மாநாடு படத்திற்கு சேட்டிலைட் ரைட்ஸ் வாங்காமல் இருந்ததுதான் காரணம் என்றனர்.

பின் உதயநிதி ஸ்டாலின் பேசி கலைஞர் தொலைக்காட்சி 6 கோடிக்கு வாங்கியது. மேலும் பொங்கள் அன்று வெளியிடவுள்ளதாகவும் அக்டிமெண்ட்டில் கூற அதற்கு டிஜிட்டர் ரைட்ஸ் வாங்கிய சோனி நிறுவனம் ஒத்துக்கொள்ளவில்லையாம்.

பின் சிம்புவின் அப்பா டி ராஜேந்திரன் வாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த அனைத்து பிரச்சனைக்கும் காரணமாக இருந்தது விஜய் தொலைக்காட்சி தானாம். ஆரம்பத்தில் படத்தின் சேட்லைட் ரைட்ஸ் வாங்க ஒப்புக்கொண்டு பின் திட்டமிட்டு ஏமாற்றியுள்ளதாம். தற்போது பெரிய தொகைக்கு விஜய் தொலைக்காட்சி சேட்டிலைட் உரிமத்தை பெற்றுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.