65 வயசிலும் தலைகீழா நிப்பேன்..இப்போ 85 வயசிலும்!! சிவக்குமாரின் இளமை ரகசியம்..
சிவக்குமாரின் இளமை
இன்றைய தேதியில் தமிழ் திரையுலகில் ஸ்டார் நடிகர்களாக திகழ்ந்து வரும் சூர்யா, கார்த்தியின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான சிவக்குமாருக்கு வயது 84 ஆகிறது. இந்த வயதிலும் குறையாத இளமையிலும் ஆரோக்கியத்திலும் உற்சாகமான குரல்வளத்துடனும் இருக்கிறார் சிவக்குமார். அதற்கு காரணம் என்ன என்பதை அவரே வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன்னுடைய இந்த நீண்ட நெடிய வாழ்க்கையில், தான் கற்றுக்கொண்ட முக்கியமான உடல் சார்ந்த நலன்களாக சிவக்குமார் வைப்பது, வாக்கிங், தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஆகியவற்றைத்தான்.
தண்ணீர்
தினமும் 2 லிட்டர் தண்ணீராவது குடிப்பதன் மூலம் உடலிலுள்ள எல்லா நச்சுகளையும் வெளியேற்றிவிட முடியும். வாக்கிங் மூலம் உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்று கூறுகிறார்.
அதேபோல், நீண்டநேரம் கம்ப்யூட்டரை பார்ப்பதுதான் இப்போதைய பல இளைஞர்களின் பிரச்சனை. 8 மணி நேரம், 10 மணிநேரம் கணினி பார்க்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்களை சிமிட்ட வேண்டும். அப்போதுதான் கண்களிலுள்ள திரவம் உயிர்பெறும். இதுவே கண்ணாடி போடும் நிலையில் இருந்து நம்மை காக்கும்.

கால்கள்
1995ல் இருந்து தான் யோகா செய்து வருவதாகவும், 65 வயது வரை தலைகீழாக நிற்கும் அளவிற்கு ஃபிட்டாகவே நான் இருந்தேன். இப்போது 85 வயதிலும் ஆரோக்கியமாகவே இருக்கிறேன். தினமும் ஆரோக்கியமாக நடக்கிறேன். நம் கால்கள் தான் நம் இரண்டாவது இதயம். நாம் எவ்வளவு பெரிய சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் சிகிச்சை முடிந்தப்பின் நம்மிடம் எழுந்து நடங்க, என்றுதான் சொல்வார்கள்.
ஏனெனில் கால்கள் சரியாக இயக்கினால்தான், நம் உடல் சரியாக இயங்கும், அதனால் தான் சொல்கிரேன், எல்லோரும் நிச்சயமாக வாக்கிங் செல்லுங்கள். உங்கள் மூட்டு நலமுடன் இருந்தாலே, நீங்கள் நலமாக இருக்கின்றீர்கள் என்றுதான் பொருள்.

நான் தினமும் காலை 40 - 45 நிமிடங்களுக்கு வாக்கிங் செல்வேன். ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக்கொண்டே, சட்டையில்லாமல் வீட்டு மொட்டை மாடியில் நடப்பேன். இப்படி நடக்கும்போது, தோல்கள் மூலம் உடலுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும். வியர்வை மூலம் எல்ல நச்சும் நீங்கியும் விடும். முதுமையிலும் நான் ஆரோக்கியமாக இருக்க இதுதான் காரணம் என்று சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடிபில்டிங் செய்தவர்கள்கூட நீண்டகாலம் வாழ்ந்ததாக நாம் பார்க்கவில்லை. ஆனால் யோகாவும் வாக்கிங்கும் செய்தவர்கள் 80 - 90 வயது வாழ்கிறார்கள். இன்றும் இதை தமிழ்நாட்டின் கிராமங்களில் நீங்கள் காணலாம், அவ்வளவு ஏன், நானே அதற்கு சாட்சி. சாதனங்கள் இல்லாத, இந்த எளிய பயிற்சிகளை நிச்சயம் எல்லோரும் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.