நயன் - ஹன்சிகாலாம் இல்லை!! இந்த நடிகையுடன் நடிகர் சிம்பு கல்யாணமா!! உளறிய நடிகை..
தமிழ் சினிமாவில் STR-ஆக திகழ்ந்து பல கோடி ரசிகர்களை கவர்ந்திழுத்து வருபவர் நடிகர் சிலம்பரசன். சிம்பு என்று மக்களால் அழைக்கப்படும் சிம்பு ஆரம்பத்தில் இருந்து பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.
அதிலும் நடிகை நயன் தாரா, ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகளுடன் ஓப்பன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார். தற்போது வரை திருமணம் செய்யாமல் இருந்து வரும் சிம்பு மீண்டும் உடல் எடையை குறைத்து தன்னுடைய மார்க்கெட்டை பிடித்துவிட்டார்.
இந்நிலையில், சிம்பு பிரபல நடிகையை திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இத்னானியை தான் சிம்பு காதலித்து வருவதாகவும் இரு குடும்பத்தினரும் சம்மதம் கூறிவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
ஆனால் நடிகை சித்தி, சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் நடிகர்களில் ரோஜா பூ கொடுத்து கல்யாணம் செய்ய ஆசைப்பட்டால் அதை சிம்புவை தான் என்று கூறியிருந்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.