கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகை!! பார்ட்டி முடிந்தும் தரதரவென இழுத்துச்சென்ற கணவர்.. வீடியோ..
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சனா கான். இப்படத்தினை தொடர்ந்து ஒரு நடிகையின் டைரி, பயணம் போன்ற படங்களில் நடித்த சனா கான் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியில் சனா கானை தரதரவென கணவர் இழுத்துசென்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து சனா கான் அதற்கான விளக்கத்தை கூறியிருக்கிறார். இஸ்லாம் மதத்தை சார்ந்தவர் என்பதால் முழுமையாக மதத்தை பின்பற்றுவதற்காக நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் இருந்து விலகினார்.
அதன்பின், சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சனா கான், சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் நிலையில் இப்தார் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அந்த நிகழ்ச்சி முடிந்தது கார் டிரைவர் வெகுநேரம் வராததால் அசெளகரியமான சூழலை உணர்ந்து அங்கிருந்து விரைந்து சென்றோம். தண்ணீர் குடிக்கவும், காற்று வாங்கவும் தான் என்னை அப்படி கணவர் அழைத்து சென்றதாக அந்த வைரலாகும் வீடியோவில் ரீப்ளே செய்திருக்கிறார் சனா கான்.