ஷூட்டிங்கில் அந்த மாதிரி நடந்து கொண்ட சிம்பு, நயன்தாரா.. ரகசியத்தை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
நடிகர் சிம்பு பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். அந்த வரிசையில் முன்னணி நடிகை நயன்தாராவும் இடம் பிடித்துள்ளார்.
2006 -ம் ஆண்டு வெளியான வல்லவன் படத்தில் சிம்புவிற்கு நயன்தாரா ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்தின் போது இருவரும் காதலித்து வந்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. இதை உறுதி படுத்தும் வகையில் சிம்பு நயன்தாரா இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.
இதையடுத்து இருவரும் சேர்ந்து ஒன்றாக படம் நடிக்காமல் இருந்த நிலையில் "இது நம்ம ஆளு" என்ற படத்தின் மூலம் மீண்டும் இருவரும் ஜோடியாக நடித்தனர்.
இப்படத்தின் ஷூட்டிங் போது சிம்பு நயன்தாரா நடந்து கொண்ட விஷயம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் பகிர்ந்துள்ளார்.
பி. எல். தேனப்பன் யாரிடமும் மொபைல் தர மாட்டாராம். ஒரு நாள் அவரின் மொபைலை நயன்தாரா வாங்கி நடிகைக்கு "ஐ லவ் யூ" என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த சேட்டையை சிம்புவும் நயன்தாராவும் சேர்ந்து தான் செய்தார்கள் என்று கூறியுள்ளார்.