ப்பா..! 5 நாள்தான்! கமல் இடத்தை பிடிக்க இத்தனை கோடிக்கு விலைபோன சிம்பு!
பிரபல தொலைகாட்சி சேனலில் 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். பிக்பாஸ் 5 சீசன் தற்போது முடிவடைந்து பிரபல ஓடிடி தளத்துடன் சேர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் அல்டிமேட்டையும் நடத்தி வந்தார். திடீரென இந்தியன்2, விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனையால் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
அவருக்கு பதில் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்ப்பாக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சிம்பு தான் பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியது.
தற்போது நிகழ்ச்சிக்காக சிம்பு ஒரு வாரத்தின் ஒரு நாள் எபிசோட்டிற்கு வர ரூ. 1 கோடி அளவில் சம்பளமாக பேசப்பட்டு 5 வாரத்திற்கு ரூ. 5 கோடியில் சம்பளமாக வாங்கவுள்ளார் சிம்பு.