நடிகர் சிம்புவுக்கு அந்த நடிகையுடன் திருமணம்.. க்ரீன் சிக்னல் காட்டிய குடும்பம்

marriage love simbu nidhi agarwal
By Kathick Mar 19, 2022 12:00 PM GMT
Report

கடந்த பல வருடங்களாக நடிகர் சிம்புவிற்கு எப்போது திருமணம் நடக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சிம்பு காதலிக்கும் பெண்களும், வீட்டில் பார்க்கும் பெண்களுக்கும் இறுதியில், சிம்புவிற்கு ரெட் சிக்னல் காட்டிவிடுகிறார்கள்.

சமீபத்தில், நடிகர் சிம்பு, பிரபல நடிகை நிதி அகர்வாலை காதலித்து வருவதாக கோலிவிட்டில் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், ஒரே வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது, சிலம்பரசன், நிதி அகர்வாலின் காதலுக்கு டி.ராஜேந்தரும், அவரது மனைவியும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், மிக விரைவில் இவர்களின் திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.