சிவாஜி கணேசனை காக்க வைத்த சிம்ரன்!! காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த விஜய்யின் அப்பா..
தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என்று புகழப்பட்டு கொண்டாடப்பட்டவர் நடிகர் சிவாஜி கணேசன். முன்னணி நடிகராக 70, 80களில் கொடிக்கட்டி பறந்த சிவாஜி அவர்கள் ஒரு கட்டத்தில் குணச்சித்திர ரோலில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி நடிகர் விஜய் நடிப்பில் அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான படம் ஒன்ஸ் மோர்.
இப்படத்தில் சிவாஜி கணேசன் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இருந்து தமிழில் நடிகை சிம்ரனை அறிமுகம் செய்து வைத்துள்ளார் எஸ் ஏ சந்திரசேகர். அப்போது சிவாஜி பற்றி ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்த சிம்ரன் அவரை நேரில் பார்த்ததில்லை.
இந்நிலையில் ஒன்ஸ் மோர் படத்தின் ஒரு காட்சியை எடுக்க தயாராகினர். அப்போது 8 மணிக்கு ஷூட்டிங்கின் ஆரம்பிக்கவிருந்தது. சிவாஜி அவர்கள் 7 மணிக்கே ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டார்.
ஆனால் சிம்ரன் மட்டும் வரவில்லை. பாலிவுட்டில் 10 மணிக்கு தான் ஷூட்டிங் நடத்துவார்கள் என்பதால் சிம்ரன் 10 மணிக்கு மேல் ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார். இதனால் கடும்கோபத்தில் எஸ் ஏ சி, திட்ட ஆரம்பித்து படப்பிடிப்பே இன்று வேண்டாம் என்று அனுப்பி வைத்துவிட்டார்.
அதன்பின் அவ்வளவு நேரம் சிவாஜி அவர்கள் காத்திருந்த விசயத்தை அறிந்த சிம்ரனை, சிவாஜி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். அதன்பின் தான் படப்பிடிப்பு நடந்துள்ளதாம்.