இப்படி ஒரு கஷ்டம் எந்த நடிகைக்கும் வரக்கூடது? நரக வேதனையில் கஷ்டப்பட்ட நடிகை சிம்ரன்
90ஸ் கிட்ஸ்களில் மிகவும் கவர்ந்திழுத்து கனவுக்கன்னியாகவும் இடுப்பழகி நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான கமல், அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த் போன்ற நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார் நடிகை சிம்ரன்.
தற்போது 50 வயதை எட்டிய நிலையில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் மறைந்த நடிகையும் சிம்ரனின் தங்கை மோனலுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் சிம்ரன்.
விஜய்யின் பத்ரி படத்தில் 2002 ஆம் ஆண்டு அவருக்கு ஜோடியாகவும் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை மோனல். தமிழ், தெலுங்கு என நடித்து வந்த மோனல் 21 வயதில் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.
சிறுவயதிலேயே தன் தங்கையை இழந்து இன்று வரையில் நரக வேதனையில் இருப்பதாக கூறி வந்துள்ளார் சிம்ரன்.
நீ இப்போது என்னுடன் இல்லை, ஆனால் எனக்கு தெரியும் நாம் எப்போதும் ஒன்றாக தான் இருக்கிறோம் என்று, 20 வருடங்கள் கடந்தாலும், என்னுள் கொஞ்சம் நீ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய்.
நாங்கள் அனைவரும் உன்னை எப்போதும் மிஸ் செய்கிறோம், மோனு என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் சிம்ரன். மோனல் மரணத்திற்கு காதல் தோல்வி தான் காரணம் என்று கூறப்படுகிறது.
I may not have you here, but I know we will always have each other. Though it's been 20 years, a little bit of you always lives in me.
— Simran (@SimranbaggaOffc) April 14, 2022
We all miss you, Monu. Forever ? pic.twitter.com/eNmAXdlvdQ