21 வருடங்கள் கழிந்தும் மறக்க முடியாத துக்கம்!! நடிகை சிம்ரன் போட்ட உருக்கமான பதிவு..
Simran
By Edward
90 களில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சிம்ரன். இவரின் தங்கை மோனல் நாவலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 -ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் மரணம் பல ஆண்டுகளாக மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் மோனல் நாவல் மரணம் குறித்து தகவல் ஒன்று வெளியானது.
அது என்னவென்றால் பிரபல நடன கலைஞர் கலா மாஸ்டரின் சொந்தக்காரர் பிரசன்னா என்பவர் மோனல் நாவலை காதலித்துள்ளார்.
ஆனால் இவர்களின் காதலுக்கு கலா மாஸ்டரின் குடும்பம் சம்மதம் தெரிவிக்காதநிலையில் மோனல் நாவல் தற்கொலை செய்து கொண்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தற்போது தன் தங்கை தற்கொலை செய்து மரணமடைந்தது நிகழ்வை நினைத்து நடிகை சிம்ரன் உருக்கமாக மோனல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். எப்போது உன்னை மறக்கமுடியாது என்று பதிவிட்டுள்ளார் நடிகை சிம்ரன்.