ரூம் போட்டு யோசிப்பாங்களோ? நடிகை சிம்ரனின் அப்படியொரு காட்சியை கலாய்த்த நெட்டிசன்கள்..

Ajith Kumar Simran S.J.Suryah
By Jai Jul 18, 2022 07:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை சிம்ரம். முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என கொடிக்கட்டி பறந்த சிம்ரன் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

பல ஆண்டுகள் கழித்து பிரசாந்த்க்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் இணையத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று வாலி படத்தை டிரோல் செய்ததை பகிர்ந்துள்ளார்.

அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வாலி படத்தில் சிம்ரன் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். அப்படத்தில் நிலவை கொண்டு வா பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றது.

அந்த பாடலை பாடும் பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு காய்ச்சல் வந்ததால் தான் அப்படி பாடினார் என்று டிரோல் செய்துள்ள வீடியோ தான் அது. இதை திங்கள் கிழமை இப்பாடலை கேட்டு சுறுசுறுப்பானேன் என்று கூறி பகிர்ந்துள்ளார்.