சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு பதில் நடிக்கவிருந்தது இவரா?.. நடந்த அதிரடி சம்பவம்
சந்திரமுகி
2005ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் சந்திரமுகி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் டாப் 10 படங்களில் கண்டிப்பாக சந்திரமுகியும் இடம்பெறும்.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் ஜோதிகா, பிரபு, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆன இந்த படத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவின் நடிப்புக்கு அதிகம் வரவேற்பு கிடைத்தது.
நடிக்கவிருந்தது இவரா?
இந்நிலையில், இப்படத்தில் முதலில் ஜோதிகா கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டது சிம்ரன் தான். ஆனால், சில காரணத்தினால் இப்படத்தில் இருந்து சிம்ரன் விலகி விட்டார்.
அதன்பிறகு இந்த கேரக்டரில் நடிக்க ஜோதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஜோதிகா இந்த கேரக்டரில் நடிப்பாரா என்ற கேள்வி ரஜினிகாந்துக்கே எழுந்துள்ளது. ஆனால், அவரது சிறந்த நடிப்பு மூலம் ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.