முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் விஜய் பட நடிகை!..தற்போதைய நிலைமை என்ன தெரியுமா?
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சிந்து மேனன், 2001 -ம் ஆண்டு வெளியான சமுத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் யூத் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் இவருக்கு சரியான பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் கன்னடம், தெலுங்கு, மலையாள போன்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.
பல வருட கழித்து தமிழில் ஈரம் என்ற படத்தில் நடித்தார். இப்படத்திற்கு பின் பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
சிந்து மேனன் கடந்த 2010 -ம் ஆண்டு டொமினிக் பிரபு என்ற லண்டனை சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது சிந்து மேனன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
சமீபத்தில் சிந்து மேனனின் புகைப்படங்கள் வெளியானது. அதில் அவர் குண்டாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.