கடுமையான விமர்சன மெசேஜ்! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற பென்னி தயாலுக்கு இதுதான் காரணமா?
பிரபல தொலைக்காட்சி சேனலில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பரப்பாகி வெற்றியை பெற்று வந்து மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். டிஆர்பியில் தன் ஆதிக்கத்தை எப்போதும் தக்கவைத்து வருகிறது. அந்தவகையில் தற்போது சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சியின்நடுவர்களாக அனுராதா ஸ்ரீராம், எஸ்பி சரண், உன்னிகிருஷ்ணன், பென்னி தயால் போன்ற முன்னணி பாடகர்கள் இருந்து வருகிறார்கள்.
தற்போது சூப்பர் சிங்கர் 8 சம்பந்தமான எந்த ஒரு போஸ்ட்டையும் பதிவிடமாட்டேன். என்னை விமர்சித்து வரும் கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இனி வரும் சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் என்னை பார்க்க முடியாது அனைவருக்கும் நன்றி என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு காரணமாக ரசிகர்கள் பலர் கூறியது, நன்றாக பாடிவந்த போட்டியாளர் ஸ்ரீதர் சேனா கடந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேறினார்.
அதற்கு ரசிகர்கள் கடுமையாக தாக்கி மெசேஜ் செய்துள்ளதால் தான் பென்னி தயால் இப்படியான முடிவெடுக்க காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுசம்பந்தமான கருத்துக்களை டிவிட்டர் பதிவிலும் இன்ஸ்டா பக்கத்திலும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


