பெண்களுக்கு எதிரான சீண்டல்கள் தமிழ் சினிமாவில் இல்லையா? நடிகர் ஜீவாவால் கடுப்பான பாடகி சின்மயி

Jiiva Chinmayi
By Karthick Raja Sep 02, 2024 02:43 AM GMT
Report

ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையின் மூலம் மலையாள திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டது. கேரளாவில் மட்டுமின்றி மற்ற திரையுலகிலும் தற்போது இந்த விஷயம் குறித்து பேச துவங்கிவிட்டனர்.

சொல்லப்போனால் தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சீண்டல்கள் குறித்து பலரும் முன் வந்து பேசி வருகிறார்கள். காட்டு தீ போல் பரவி இருக்கும் இந்த விஷயம் குறித்து நடிகர் ஜீவாவிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான சீண்டல்கள் தமிழ் சினிமாவில் இல்லையா? நடிகர் ஜீவாவால் கடுப்பான பாடகி சின்மயி | Singer Chinmayi Angry Tweet About Jiiva

இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில், பதிலளித்த ஜீவா 'தமிழ் சினிமாவில் பாலியல் பிரச்சனை இல்லை' என கூறியிருக்கிறார். மேலும் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை, 'அறிவு இருக்கா' என திட்டியுள்ளார். இதனால் அந்த இடத்தில் பெரும் சண்டையுள்ளது.

இந்த நிலையில், பிரபல பின்னணி பாடகி சின்மயி, நடிகர் ஜீவாவின் பேச்சுக்கு கோபத்துடன் தனது சமுக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் " எனக்கு பிரியவில்லை. தமிழ் சினிமாவில் பாலியல் சீண்டல்கள் இல்லவே இல்லை என அவர்கள் எப்படி சொல்கிறார்கள்" என கேட்டுள்ளார். 

Gallery