திருமணமாகி 15 ஆண்டுக்கு பின் பிறந்த குழந்தை!! மறைந்த மகளுக்கு பிறந்தநாள் பதிவு போட்ட பாடகி சித்ரா..
தென்னிந்திய சினிமாவில் சின்ன குயில் என்ற சிறப்பான பெயருக்குரியவர் தான் கே எஸ் சித்ரா. 80களில் ஆரம்பித்து தற்போது வரை ரசிகர்கள் மனதில் அவரின் குரலால் ஈர்த்து வருகிறார்.

கே எஸ் சித்ரா - வாரிசு
வாரிசு படத்தின் 3வது பாடலைக்கூட சித்ரா தான் பாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் பாடகி சித்ரா சமீபத்தில் மறைந்த தன் 8வயது மகளின் பிறந்தநாளன்று உருக்கமான ஒரு பதிவினை போட்டுள்ளார்.
விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ரா 15 ஆண்டுகளுக்கு பின் நந்தனா என்ற பெண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு துபாயில் கச்சேரிக்காக சென்று அங்குள்ள ஓட்டலில் மகளுடன் தங்கியிருந்தார்.
அப்போது ஓட்டலில் இருந்த நீச்சல்குளத்தில் எதிர்பாராத விதமாக நந்தனா விழுந்து மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் சினிமாத்துறையினரையே அதிரவைத்தது.

மறைந்த மகளுக்கு பிறந்தநாள்
அதிலிருந்து மீண்டு வருவதற்கே சித்ராவிற்கு பல ஆண்டுகளானது. தற்போது மகள் நந்தனாவின் பிறந்த நாளுக்கு உருக்கத்துடன் அவர் புகைப்படத்துடன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், தேவதைகளுடன் நீ சொர்க்கத்தில் பிறந்தநாளை கொண்டாடுங்கள்.
எல்லோரிடமும் அன்பு செலுத்தும் உனக்கு எத்தனை ஆண்டுகளானாலும் சென்றாலும் வயதாகி விடாது. நீ தொலைவில் சென்றாலும் பாதுக்காப்பாக இருக்கீர்கள். நான் எப்போது நேசிப்பதைவிட இன்று அதிகமாக நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.