80-களில் கொடிக்கட்டி பறந்த பாடகி ஜென்ஸி!! இளையராஜா உதவியும் ஓரங்கட்டப்பட்ட மர்மம்..
சினிமாவை பொறுத்தவரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் மார்க்கெட்டுக்கு ஏற்றபடி வாய்ப்புகள் காலத்திற்கேற்ப மாறும். ஆனால் பாடகர்களுக்கோ அப்படி கிடையாது. தன் குரல் ஜாலத்தால், எல்லா காலத்திலும் மின்னிக்கொண்டே தான் இருக்க வேண்டும். ஆனால் அந்தவகையில் பிரபல பாடகி ஒருவர் காணாமல் போன தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சிறுவயதில் இருந்தே இசைமீது ஆர்வம் காட்டி வந்தவர் தான் அந்த பாடகி ஜென்ஸி. மலையாள சினிமாவில் பாடகியாக ஜேசுதாஸ் அவர்களால் அறிமுகம் கிடைத்து தமிழில் இளையராஜாவிடமும் அறிமுகம் கிடைத்துள்ளது. அப்படி இளையராஜாவின் இசையில் உருவான பல பாடல்களை பாடியிருக்கிறார் ஜென்ஸி. அவர் பாடல்கள் ஹிட்டானதை அடுத்து எப்படியாவது சென்னை வந்துவிடு என்று இளையராஜா கூறியிருக்கிறார்.
ஆனால் ஜென்ஸியின் அப்பா இதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருந்ததால் பாடுவதையே நிறுத்த திட்டமிட்டார். அதன்பின் கேரளாவில் இசையாசிரியராக பணீயாற்றி வந்த ஜென்ஸி, அதோடு காணாமல் போய்விட்டார். இதுகுறித்து தயாரிப்பாளரும் நடிகருடமான சித்ரா லட்சுமணன், சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜென்ஸி குறித்து பகிர்ந்துள்ளார்.
கேரளாவில் தமிழ் சினிமா படங்கள் 80 காலக்கட்டத்தில் திரையிடாத காரணத்தினால் தான் ஜென்ஸி இங்கு பிரபலமாகவில்லை என்று கூறும் காரணம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜென்ஸ் பாடப்போவதில்லை என்று கூறப்பட்ட போது ஏன் எந்த இசையமைப்பாளரும் அவரை கேட்கவில்லை.
வெகுதொலைவில் எல்லாம் ஜென்ஸி வசிக்கவில்லை பக்கத்தில் இருக்கும் கேரளாவின் கொச்சியில் தான் வசித்து வருகிறார். அப்படி இருக்கும் போது வேண்டுமென்றே அவரின் வளர்ச்சியை கெடுக்க ஜென்ஸியை யாராவது ஓரங்கட்டி இருக்கலாம் என்றும் ஜென்ஸிக்கு இது புரிந்து கொள்ளாமல் போயிருக்கலாம் என்று சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார்.
