அனிருத்தை ரகசியமாக காதலிக்கிறாரா பிரபல பாடகி!! உண்மையை உடைத்த ஜோனிதா காந்தி..
தமிழ் சினிமாவை பொருத்தவரை காதல் மன்னனாகவும் லீலைக்கு பேர் போன நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் நடிகர் கமல் ஹாசன். அவருடன் நடிக்கும் நடிகைகளுடன் எப்படியாவது நெருக்கமான மற்றும் முத்தக்காட்சியில் நடித்துவிடுவார்.
[D9590H ]
அப்படி கமல் ஹாசன் ரொமான்ஸ் லிஸ்ட்டிலும் காதல் லிஸ்ட்டிலும் அவரையே மிஞ்சிய அளவிற்கு பேசப்பட்டவர் தான் இசையமைப்பாளர் அனிரூத். பக்கா பிளேபாயாக ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் லீக் புகைப்படங்களால் அவதிப்பட்டவர்.
அதேபோல் பலருடன் கட்டியணைத்த படி அனிரூத் எடுத்த புகைப்படங்களும் இணைத்தில் வைரலாகியது. அந்தவகையில் அனிருத் தன் இசையில் தொடர்ந்து பல பாடல்களை பாடி வரும் பாடகி ஜோனிதா காந்தியை காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகியது.

இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அவுட்டிங் புகைப்படங்களை வைத்து அனிருத்தை, ஜோனிதா காதலிப்பதாகவும் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் கசிந்தது.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அனிருத்துடன் காதலா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜோனிதா காந்தி, அனிருத் இசை எனக்கு பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவரது உதவியாளர், அப்படி எங்கும் அவர் சொன்னதில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.