சமந்தாவின் கவர்ச்சி பாடலுக்கு மோசமாக விமர்சித்த பிரபலம்... என்ன சொன்னார் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் தான் சமந்தா. மயோசிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இவர் தற்போது குணமாகி குஷி படம் ஷூட்டிங் சென்று வருகிறார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021 -ம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்ததால் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா கவர்ச்சியா நடனமாடியிருப்பர். புஷ்பா படத்தின் வெற்றி பெற்றதிற்கு இந்த பாடல் தான் காரணம் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டனர். அந்த அளவுக்கு ஹிட் அடித்தது.

இதெல்லாம் ஒரு பாடலா?
இந்நிலையில் பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி நிகழ்ச்சி ஒன்றில் ,"இந்த காலத்தில் வெளியாகும் பாடல்கள் எனக்கு பிடிக்கவில்லை. நான் ஓ சொல்றியா மாமா பாடலை கேட்டேன். இதெல்லாம் ஒரு பாடலா? பாடல் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரே மாதிரி இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
