ஜான்வி கபூர் கிளாமராக.. இதுதான் ஆசை!! தேவி ஸ்ரீ பிரசாத் பேச்சால் பரபரப்பு
புஷ்பா
தெலுங்கு திரையுலகில் கடந்த வருடம் நிறைய ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது, அதில் ஒன்று டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா 2.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடித்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா முதல் பாகத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் கிளாமராக நடனம் ஆடி பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருந்தார்.
படத்தின் வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அடுத்து புஷ்பா 2ல் ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார். அதுவும் ஹிட் ஆனது. மேலும் படமும் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கிவிட்டது.
பரபரப்பு
இந்நிலையில், புஷ்பா முதல் பாகத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் அவரிடம் புஷ்பா 3 - ம் பாகத்தில் யார் கிளாமராக நடனமாடினால் நன்றாக இருக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, ஜான்வி கபூர் ஆடினால் சூப்பராக இருக்கும் என்று பதிலளித்துள்ளார்.
மேலும் தேவி ஸ்ரீ பிரசாத், எனக்கு சாய் பல்லவியின் நடனம் மிகவும் பிடிக்கும் என்றும், அவருடைய நடனத்திற்கு இசையமைக்க ஆவலுடன் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.