இப்படி நடக்கும்னு எதிர்ப்பார்க்கல்..ஆனா, இப்போ!! பாடகி சைந்தவி உடைத்த ரகசியம்....

Tamil Singers Saindhavi Saregamapa Lil Champs
By Edward Apr 10, 2026 12:45 PM GMT
Report

பாடகி சைந்தவி

பிரபல பாடகி சைந்தவி, கடந்த ஆண்டு தன்னுடைய கணவர் ஜிவி பிரகாஷ் குமாரை சட்டப்பூர்வமாக பிரிந்தார். விவாகரத்து பெற்று பிரிந்தாலும், குழந்தைக்காக, இருவரும் நண்பர்களாகவும் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்தும் வருகிறார்கள்.

இப்படி நடக்கும்னு எதிர்ப்பார்க்கல்..ஆனா, இப்போ!! பாடகி சைந்தவி உடைத்த ரகசியம்.... | Singer Saindhavi Emotional Opens About Her Journey

தற்போது சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் சைந்தவி, ஆரம்பத்தில் இருந்த தன்னுடைய பயத்தை பற்றி பகிர்ந்துள்ளார். அதில், நான் மேடையில் பாடும்போது டான்ஸ் ஆடினால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று ஆரம்பத்தில் பயமாக இருந்தது.

டான்ஸ்

எனக்கு சரியாக டான்ஸ் ஆட வருமா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் இப்போது ரியாலிட்டி ஷோக்களில் பாடுவது மட்டும் போதாது, பார்ப்பவர்களுக்கு அட்டென்ஸையும் ஈர்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள், அதனால் நானும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்து டான்ஸ் ஆட தொடங்கினேன்.

இப்படி நடக்கும்னு எதிர்ப்பார்க்கல்..ஆனா, இப்போ!! பாடகி சைந்தவி உடைத்த ரகசியம்.... | Singer Saindhavi Emotional Opens About Her Journey

நான் ஒரு பிரொஃபஷனல் டான்ஸர் இல்லை, எனக்கு டான்ஸ் பற்றி பெரிய அறிவும் இல்லை. ஆனால் அந்த தருணத்திற்கு ஏற்றமாதிரி என்னால் முடிந்ததை செய்தேன்.

மக்கள் இவ்வளவு ஆதரவு தருவார்கள் என்று நினைக்கவே இல்லை, இப்போது எல்லோரும் மிகவும் பாசத்துடன் நடந்து கொள்கிறார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.