அட்ஜெஸ்ட் பண்ண கேட்டவனுக்கு நான் கொடுத்த பதிலடி!! சிறக்கடிக்க ஆசை சீரியல் நடிகை ஓப்பன் டாக்..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் ஸ்ருதி ரோலில் நடித்து வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
மாடலிங் துறை மீது ஆர்வம் அதிகமாக இருக்கும் போது குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதன்பின் அடுத்தடுத்த ஆடிஷன்களில் கலந்து கொண்டு இந்த இடத்திற்கு வந்துருக்கிறேன்.

ஒருத்தர் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும், அதை பண்ணாம எதுக்கு சினிமாவுக்கு வந்தன்னு என்னை கேட்டவரை நீங்கள் பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அவரை மீட் பண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை, அவர் என்னை ஃபாலோ செய்து கொண்டு தான் இருக்கிறார், அதையும் நான் பார்த்தேன். இன்னும் நான் மேலே வரவேண்டும். இது தான் அவனுக்கு நான் கொடுக்கும் பதிலடி என்று ப்ரீத்தா ரெட்டி தெரிவித்துள்ளார்.