’மொத ராத்திரி’க்கு ரெடியான யூத் பட நடிகை!! ஷாக்காகும் நெட்டிசன்கள்...

Tamil Actress Youth (2026)
By Jai May 02, 2026 07:30 AM GMT
Report

2023ல் மலையாளத்தில் வெளியான பூவன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி ஐ ஆம் காதலன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனிஷ்மா அனில்குமார்.

’மொத ராத்திரி’க்கு ரெடியான யூத் பட நடிகை!! ஷாக்காகும் நெட்டிசன்கள்... | Sirai Youth Fame Anishma Anilkumar Motha Rathiri

தமிழில் சிறை, யூத் போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் அனிஷ்மா. யூத் படத்தின் நல்ல வரவேற்பால் அனிஷ்மாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியத்தொடங்கியது.

தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தமிழில் தன்னுடைய 3வது படத்தை தயாரிக்கவுள்ளது. ஆரம்பத்தில் புரொடக்ஷன் நம்பர் 3 என பெயரிடப்பட்ட இப்படத்தின் டைட்டில் மொத ராத்திரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

’மொத ராத்திரி’க்கு ரெடியான யூத் பட நடிகை!! ஷாக்காகும் நெட்டிசன்கள்... | Sirai Youth Fame Anishma Anilkumar Motha Rathiri

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். ராஜா கருப்பசாமி இயக்கத்தில் நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் இப்படத்தின் நாயகியாக அனிஷ்மா அனில்குமார் கமிட்டாகியுள்ளர்.

படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனிஷ்மா. இதனை பார்த்த பலரும், படத்தை பாக்கப்போன என்னன்னு சொல்லிட்டு போவோம் என்று கிண்டலடித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.