மரியாதை இல்லாமல் பேசிய தனுஷ் முகத்தில் முழிக்காத வடிவேலு!! உண்மையை கூறிய பிரபல இயக்குனர்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்து வரும் சுந்தர் சி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சிராஜ். தலை நகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, மருதமலை, படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன், கத்தி சண்டை, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களை இயக்கி வந்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் படிக்காதவன் படத்தில் விவேக்கிற்கு பதில் முதலில் வடிவேலு தான் நடித்திருந்தார். அப்போது தனுஷ்க்கு ஏற்பட்ட பிரச்சனையால் வடிவேலுக்கு உடன்பாடில்லாமல் போக அதிலிருந்து விலகிவிட்டார் என்று கூறியிருக்கிறார் சிராஜ்.
ஆனால் படம் வெளியாகி விவேக்கின் கண்ணாடி சீனை பார்த்த வடிவேலு, தனக்கு கால் செய்து பாராட்டியதாகவும் கூறியிருக்கிறார். மேலும் வடிவேலு தன் பாடி லாங்குவேஜ்-ஆல் நடிப்பார் என்றும் ஆனால் விவேக் டயலாக் மூலம் காமெடி செய்வார் என்றும் கூறியிருக்கிறார்.
இப்படத்தில் வடிவேலுவை தனுஷ், மரியாதை இல்லாத படி நடந்து கொண்டதால் தான் அதிலிருந்து விலகியிருக்கிறார் வைகைப்புயல். அப்படத்தினை தொடர்ந்து வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தினை இயக்கும் வாய்ப்பு பெற்று தோல்வியை சந்தித்தார் இயக்குனர் சிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சகலகலா வல்லவன் படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். ஆனால் அப்படத்தின் கதை தனுஷ் நடிக்க வேண்டியது, அதில் நடிக்காமல் போனதால் தான் ஜெயம் ரவி நடிக்க வைத்ததாக கூறியிருக்கிறார் இயக்குனர் சிராஜ்.