அண்ணா வேண்டவே வேண்டாம்? அஜித் பட இயக்குனரால் கதறும் விஜய் ரசிகர்கள்.. என்ன ஆச்சி தெரியுமா?

Vijay
By Edward Jun 02, 2022 09:03 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜ் தயாரிப்பில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ஷூட்டிங் புகைப்படங்களும் அப்டேட்டுகளும் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகர் அஜித்குமாரை வைத்து வீரம், விவேகம், விசுவாசம், வேதாளம் போன்ற படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, தளபதி அலுவலகத்திற்கு சென்று விஜய்யை சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தனக்கென ஒரு கதையை ரெடி செய்யுமாறும் விஜய் கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கேட்ட விஜய் ரசிகர்கள் அண்ணா வேண்டவே வேண்டாம் என்று புலம்பி வருகிறார்கள்.

தளபதி 66 படத்திற்கு பிறகு விஜய்யின் 67 படத்தினை லோகேஷ் கனராஜ் இயக்கவுள்ளார். அதனை தொடர்ந்து விஜய் யாரிடம் இணையவுள்ளார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.