சிறுத்தை நீங்க அப்படி இருந்ததெல்லாம் போதும்.. 42 படத்துக்கு கடுமையான கண்டீசன் போட்ட ரோலக்ஸ்

Suriya Bala Siva (director)
By Edward Aug 26, 2022 04:22 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து சமீபத்தில் சூரரை போற்று படத்திற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதினை வாங்கியவர் நடிகர் சூர்யா. விக்ரம் படத்தின் சிறப்பு தோற்றத்திற்கு பிறகு இயக்குனர் பாலாவின் வடங்காண் படத்தில் நடித்து வருகிறார்.

கீர்த்தி செட்டி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வரும் நிலையில் ஷூட்டிங் பாதியிலேயே சில காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் விருமன் பட தயாரிப்பு பணிகளில் பிஸியாக இருந்து வந்தார். தற்போது சூர்யாவின் 42 வது படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைந்துள்ளார்.

இப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. மூன்று கேரக்டரில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் அதற்கான கெட்டப் சேஞ்ஜிற்கு தாமதமாகும் என்பதால் ஷூட்டிங்கும் தாமதமாகுமாம். இதேபோல் சூர்யாவும் தன் பங்கிற்கு படத்தினை சீக்கிரமாக முடிக்க கண்டீஷன் போட்டிருக்கிறாராம்.

பெரிய நடிகர்கள் இதைதான் கூறுவார்கள் என்று தெரிந்தும் கொஞ்சம் பொறுத்தாகத்தான் வேண்டும் என்று ஓகே கூறியிருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா. இப்படம் பல மொழிகளில் உருவாகி பான் இந்தியா படமாகவும் வெளியாகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.