என்னால் எந்திரிக்க கூட முடியவில்லை.. நோயால் அவதிப்பட்டு வரும் ஷிவாங்கி

Sivaangi Krishnakumar
By Dhiviyarajan Mar 05, 2023 03:30 PM GMT
Report

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் சிவாங்கி.

இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் சிவாங்கி நடித்திருந்தார். மேலும் இவர் வைகைப்புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது சிவாங்கி குக் வித் கோமாளி 4 -வது சீசனில் குக்காக களமிறங்கியுள்ளார்.

என்னால் எந்திரிக்க கூட முடியவில்லை.. நோயால் அவதிப்பட்டு வரும் ஷிவாங்கி | Sivaangi Is Suffering Cold And Fever

நோயால் அவதி

இந்நிலையில் சிவாங்கி அவரின் ட்விட்டர் பக்கத்தில், "ஹலோ, எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள். எல்லாரும் நன்றாக தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்".

"எனக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வருகிறேன். என்னால் எந்திரிக்க கூட முடியவில்லை. உங்களின் அன்பு எனக்கு புத்துணர்ச்சி தருகிறது. உங்கள் அன்பு மட்டும் இல்லையென்றால் நான் இல்லை" என்று கூறியுள்ளார்.