டான் பட நடிகை ஷிவாங்கியின் வருங்கால கணவர்.. விருப்பத்தை கூறிய நடிகை

Sivakarthikeyan Sivaangi Krishnakumar Don
By Kathick Jun 28, 2022 12:30 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஷிவாங்கி, அனைத்து தரப்பு வயது மக்களையும் கவர்ந்தார்.

தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வரும் ஷிவாங்கி, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் நாய் சேகர் Returns படத்திலும் முக்கிய ரோலில் ஷிவாங்கி நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஷிவாங்கி சமீபத்தில் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார்.

இதில் " என்னுடைய வருங்கால கணவர் மனதால் அழகாக இருக்க வேண்டும் " என்று கூறியுள்ளார் ஷிவாங்கி. இவருடைய இந்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.