இனி குக் வித் கோமாளியில் சிவாங்கி கிடையாதா!! அவரே போட்ட ஷாக்கிங் போஸ்ட்..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களின் வரிசையில் இருப்பபவர் சிவாங்கி. சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டாப் 6 இடத்தினை பிடித்தார். சூப்பர் சிங்கர் நிகழ்சிக்கு பின் அடுத்த ஆண்டே சூப்பர் சிங்கர் சேம்பியன் ஆஃப் சேம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பின் 2019ல் ஆரம்பிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். 3 சீசன்களாக கோமாளியாக அனைவரையும் ரசித்து வந்த சிவாங்கி டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் நடித்து நடிகையாகவும் மாறினார்.
ஆல்பம் உள்ளிட்ட படங்களின் பாடல்களையும் பாடிய சிவாங்கி குக் வித் கோமாளி 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டாப் 6 இடத்தினை பிடித்தார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி போட்டி முடிந்து டைட்டிலை மைம் கோபி முதல் இடத்தினை பிடித்துள்ளார்.
இந்நிலையில் சிவாங்கி அவரது சமுகவலைத்தள பக்கத்தில், இனி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
தற்போது நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், 4 வருட பயணத்தில் நிறைய நினைவுகள், நிறைய கனவுகள், இது ரொம்ப கடினமானது குட்பாய் என்று கூறி நிகழ்ச்சி செட் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதன்மூலம் தான் அடுத்த சீசனில் இருந்து கலந்து கொள்ள போவதில்லை என்று கூறியிருப்பதை பார்த்து நெட்டிசன்கள் சோகத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

