ஒரேவொரு நாள் விட்டுக்கு வந்த பாடகி!! ஒரு வார்த்தையில் அந்த பழக்கத்தை விட்ட சிவாஜி..
தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என்று பலரால் புகழப்பட்டு வந்த சிவாஜி கணேசன், மறைவுக்கு பின்பும் இன்றுவரை அவர் நடிப்பை புகழாதவர்கள் இருக்க முடியாது. அப்படி பலரால் ரசிக்கப்பட்ட நடிகராக திகழ்ந்து வந்தார்.
சமீபத்தில் சித்ரா லட்சுமணன் சிவாஜி பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். சிவாஜி, அசைவ உணவை விருப்பியவர் என்றும் அதிலும் குயில் கறி அதிகம் விரும்பி சாப்பிடுவார் என்றும் கூறியிருக்கிறார்.
அப்படி இருக்கும் போது அவரது சென்னை வீட்டில் குயில்கள் அதற்காகவே கூண்டில் வளர்க்கப்பட்டதாம். இருவரும் சகோதர சகோதரிகளாக இருந்து வந்தபோது மாறி மாறி அவர்கள் வீட்டிற்கு செல்வார்களாம்.
ஒருமுறை முன்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் கூண்டில் அடைக்கப்பட்ட குயில்களை பார்த்து ஷாக்காகி என்ன இது எதற்கு என்று கேட்க, எதுக்கு சாப்பிடத்தான் என்று சிவாஜி சொல்லியுள்ளார்.
சுதந்திரமாக பறக்க ஆசைப்படும் பறவைகளை இப்படி அடைக்கலாமா திறந்துவிடுங்கள் என்று கூற உடனே அதை செய்ததோடு அன்றிலிருந்து குயில் கறி சாப்பிடுவதை நிறுத்தி வைத்திருக்கிறார் சிவாஜி கணேசன்.