அந்த படத்தில் நான் நடிக்கவே மாட்டேன், முக்கிய நடிகரின் படத்தை நிராகரித்த SK ..

Sivakarthikeyan
By Jeeva Oct 12, 2021 08:24 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக உள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நேற்று வெளியான டாக்டர் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார், என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ரீமேக் படங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில் பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக் வாய்ப்பு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்ததாம், ஆனால் அவரோ அதை வேண்டவே வேண்டாம் என தவிர்த்துள்ளார்.

அது வெறும் கதையல்ல மேஜிக், பிரேமம் போன்ற படங்களை ரீமேக் செய்யமுடியாது என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கில் ஹிட்டான Ala vaikunthapurramuloo படத்தின் தமிழ் ரீமேக் வாய்ப்பையும் தவிர்த்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.