கமலுக்காக ஏமாற்றும் சிவகார்த்திகேயன்!! குல்லாவை கழட்டாமல் இருக்க இதான் காரணமாம்
பிரின்ஸ் படத்தின் தோல்வியை அடுத்து சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். படம் கலவையான விமர்சனம் பெற்று வந்த நிலையில் மாவீரன் படத்தின் சக்சஸ் மீட் இன்று நடந்துள்ளது.
இந்நிலையில் மாவீரன் படத்திற்கு பின் கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். அப்படத்திற்காக முக்கிய கெட்டப் போட்டுள்ளதால், சுமார் ஒரு மாதத்திற்கு மேலான சிவகார்த்திகேயன் குல்லா அணிந்து தான் வெளியில் செல்கிறார்.
அப்படி என்ன தான் கெட்டப் என்று பலர் யூகித்து வந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி காரணத்தை தெரிவித்திருக்கிறார்.
தலையில் நிறைய முடியை அடைக்கி வைத்திருப்பார் என்று எல்லோரும் நினைத்திருக்கிறோம். அதுதான் கிடையாதாம், ராஜ் குமார் பெரியசாமி படத்தில் ராணுவ வீரராக நடிக்கவிருக்கிறார்.
அதற்காக ராணுவ வீரர் எப்படி முடி வைத்திருப்பாரோ அப்படி இருக்கிறார். இது வெளியில் தெரியாமல் இருக்க ஏமாற்றி வந்துள்ளார். முடி கட் செய்ய பிரச்சனை இல்லையே, ஷூட்டிங் போகும் போது அதை செய்யலாமே என்று பிம்மி தெரிவித்துள்ளார்.
