எதையும் கண்டுக்கொள்ளாமல் சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன்!! வைரலாகும் குடும்ப புகைப்படம்..
தமிழ் சினிமாவில் தற்போது பெரிதாக பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது டி இமான் - சிவகார்த்திகேயன் பிரச்சனை தான். தனக்கு துரோகம் செய்து விட்டார் சிவகார்த்திகேயன், அவருடன் இனி சேரப்போவதில்லை என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.
இதற்கு காரணம் இமானின் முன்னாள் மனைவி மோனிகாவுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவருடன் ஆபாசமாக சிவகார்த்திகேயன் பேசினார் என்ற தகவலும் பலர் பேசி வந்தனர். இதற்கு சிவகார்த்திகேயன் தரப்பில் கூட எந்த பதிலும் கிடைக்காததால் அது பற்றி இன்னும் பேசி வருகிறார்கள்.
இதனால் சிவகார்த்திகேயன் படத்திற்கும் மார்க்கெட்டிற்கும் பிரச்சனை வரும் என்று பத்திரிக்கையாளர்கள் பேசி வருகிறார்கள். இது தொடர்பாக சிவகார்த்திகேயன் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து வருகிறார்.
மேலும் சில முக்கிய இடங்களுக்கு மட்டுமே தலையை காட்டி வருகிறார். நேற்று தீபாவளியை முன்னிட்டு தன் இரு குழந்தைகள் மற்றும் மனைவி ஆர்த்தியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.