வளர்த்துவிட்டவரை மறந்துபோன சிவகார்த்திகேயன்.. இதெல்லாம் ஒரு பொழப்பா
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடிக்கும் படங்கள் பாக்ஸ் ஆபிசில் பல சாதனைகளை படைக்கிறது.
இந்நிலையில், நேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது திரைவாழ்க்கை வெற்றிபெற யார்யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ, அவர்களுக்கு கெல்லாம் நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிருந்தார்.
இதில் தொடர்ந்து பலருடைய பெயரை குறிப்பிட்டு இருந்த சிவகார்த்திகேயன், தன்னை கதாநாயகனாக மாற்றிய, தயாரிப்பாளர் ஆர்.டி ராஜாவின் பெயரை ஒரு இடத்தில் கூட நன்றி கூறி குறிப்பிடவில்லை. இன்று முன்னணி நட்சத்திரமாக பல கோடியில் சம்பளம் வாங்கி வரும் சிவகார்த்திகேயனை, ஆரம்பகாலகட்டத்தில் தூக்கிவிட்டவர், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா.
சிறு சண்டையில் ஆர்.டி. ராஜாவிடம் இருந்து பிரிந்த சிவகார்த்திகேயன், அவருடைய பெயரை அறிககையில் குறிப்பிடாமல் சிவகார்த்திகேயன் விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.