கோடியில் புரளும் சிவகார்த்திகேயனுக்கு பத்து ஆயிரம் ரூபாய் தான் சம்பளமாக.. யாருப்பா அந்த இயக்குனர்
Sivakarthikeyan
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகர்த்துகேயன். இவர் நடிப்பில் கடைசியாக பிரின்ஸ் திரைப்படம் வெளிவந்தது. மேலும் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
மடோன் அஸ்வின் இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடிக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒரு படத்தில் நடிக்க சுமார் 15 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளமாக வாங்கி வருகிறார். ஆனால், தான் நடித்த முதல் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கி சம்பளம் ரூ. 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே தானாம்.
இன்று நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல கோடியில் புரளும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இயக்குனர் பாண்டிராஜ் 10 ஆயிரம் ரூபாய் தான் சம்பளமாக கொடுத்துள்ளார். இந்த தகவல் சிவகார்த்திகேயனே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.