40 வயது இயக்குநருடன் தொடர்பில் இருக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை..வாய்ப்பிறகாக இப்படியா?
சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் தன்னுடன் பணியாற்றி சக நடிகை நடிகர்களுடன் தான் காதலில் இருப்பதும் டேட்டிங் செய்வதுமாக இருப்பார்கள். ஆனால் அது மாறி இயக்குநர், தயாரிப்பாளர்களும் இந்த லிஸ்டில் சேர்கிறார்கள். அந்தவகையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் பறவைகளுக்கு அடுத்ததாக களமிரங்கி இருக்கிறார் இளம் நடிகை அனு இமானுவேல்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களை கவர்ந்தவர். அதற்கு முன்னரே துப்பறிவாளன் எனும் படத்தில் நடித்திருந்தார். 23 வயதான அனு இம்மானுவேல் தற்போது 40 வயது இயக்குனர் ஒருவருடன் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அடிக்கடி தனிமையில் சந்திப்பதும், காதலை கொண்டாடுவதும் என ஜெகஜோதியாக இருப்பதாக அக்கட தேசத்தில் இருந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அதாவது, 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் ஆக்சிஜன். இந்த படத்தை இயக்கியவர் தான் ஜோதி கிருஷ்ணா என்ற 40 வயது இயக்குனர்.
இவர் பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்னத்தின் மூத்த மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக்சிஜன் படப்பிடிப்பின் போது இருவருக்கும் நெருக்கம் அதிகமானதாக அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் சமீபகாலமாக இருவருக்குள்ளும் காதல் எல்லைமீறி இருந்து வருகிறதாம். மேலும் இருவரும் ஜோடியாக சுற்றுலா தலங்களுக்கு ஜோடியாக கிளம்பி விடுகிறார்களாம்.
வழக்கம்போல் எல்லா நடிகைகளும் செய்வது போல அனு இமானுவேல் தற்போது வரை தன்னுடைய காதலைப் பற்றி வாய் திறக்க வில்லை என்பதும் கூடுதல் தகவல். இந்த செய்திதான் அக்கட தேசத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் சினிமாவில் அனு இமானுவேல் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் செய்து கொண்டு கிளம்பி விடுவாரோ என அச்சத்தில் இருக்கிறார்களாம்.