இமானின் சர்ச்சை பேட்டி.. சிவகார்த்திகேயனுக்கு சுத்தி இந்த மாதிரி நடக்குது.. பிரபலம் ஷாக்கிங் பேட்டி
Sivakarthikeyan
D Imman
D. Imman
Tamil Actors
By Dhiviyarajan
சமீபத்தில் இமான் கொடுத்த பேட்டியில் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரை டேமேஜ் ஆகிவிட்டது. இவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து நாம் பக்கத்தில் பல தகவல்களை பகிர்ந்துள்ளோம்.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு இந்த பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், நாம் ஒருவரை காலி செய்ய வேண்டும் என்றால் அவரை பெயரை கெடுத்தால் போதும். தற்போது சிவகார்த்திகேயனுக்கு அந்த பிரச்சனை தான் நடந்து வருகிறது.
ஒருபக்கம் அயலான் பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. மறுபக்கம் இந்தப் பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன் வெகுவாக 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டார். இவரின் இந்த வளர்ச்சிக்கு யாருக்கு பிடிக்கவில்லை. அதானல் தான் இந்த மாதிரியான பிரச்சனை நடந்து வருகிறது என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.