மதராஸி படத்திற்காக குறைந்த சம்பளம் வாங்கியுள்ளாரா சிவகார்த்திகேயன்.. எவ்வளவு தெரியுமா

Sivakarthikeyan Madharaasi
By Kathick Aug 30, 2025 02:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் மதராஸி. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வல் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற செப்டம்பர் 5ம் தேதி இப்படம் பிரம்மாண்டமான முறையில் உலகளவில் ரிலீஸ் ஆகிறது. சிவகார்த்திகேயன் தற்போது ஒரு திரைப்படத்திற்கு ரூ. 40 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.

மதராஸி படத்திற்காக குறைந்த சம்பளம் வாங்கியுள்ளாரா சிவகார்த்திகேயன்.. எவ்வளவு தெரியுமா | Sivakarthikeyan Madharaasi Movie Salary

இந்த நிலையில், மதராஸி திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக தான் வாங்கும் சம்பளத்தை விட குறைவான சம்பளம்தான் சிவகார்த்திகேயன் மதராஸி படத்திற்காக வாங்கியுள்ளாராம். மதராஸி படம் வெளிவந்து லாபம் பெற்ற பின், அந்த லாபத்தில் இருந்து சம்பளத்தை வாங்கிக்கொள்வதாக profit sharing முறையை இப்படத்தில் அவர் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.