சூர்யா பத்தாதாம்! சிவா தான் வேண்டுமாம்! சிறுத்தையால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு
தமிழ் சினிமாவில் குடும்ப படங்களை கொடுத்து ஹிட் கொடுத்து வருபவர் இயக்குனர் சிறுத்தை சிவா. நடிகர் கார்த்திக்கின் சிறுத்தை படத்தினை இயக்கி வெற்றியை கொடுத்த சிவா பின் அஜித்தினை வைத்து வேதாளம், வீரம், விவேகம், விசுவாசம் என 4 படங்களை இயக்கியப்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தையும் கொடுத்திருந்தார்.
படம் அண்ணன் தங்கை கதையாக இருந்து கலவை விமர்சனங்களை பெற்று வந்தது. இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டான், அயலான் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. கலைபுலி தாணு அவர்கள் சிவகார்த்திகேயனிடம் டேட் கேட்டு பேசியதாகவும், சிறுத்தை சிவா, மற்றும் வெங்கட் பிரபுவை கமிட் செய்துள்ளார்.
சிவகார்த்திகேயனே நேரடியாக சென்று சிறுத்தை சிவாவிடம் குடும்ப கதையில் நடிக்க கேட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியது.