நடிகர் சிவகார்த்திகேயனுக்கு காதல் தோல்வியா..! அதுவும் யாருடன் தெரியுமா
Sivakarthikeyan
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டான் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ்.
இப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், திருமணத்திற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி பருவத்தில் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்தாராம். ஆனால், அந்த காதல் அந்த பெண்ணுக்கே தெரியாமல் போய்விட்டதாக நகைச்சுவையுடன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.